பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
==================================================================
நான்காம் தந்திரம்:பதிக எண்:01: அசபை ............................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:02: திருவம்பலச் சக்கரம் ...பாடல்கள்: 089
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
==================================================================
நான்காம் தந்திரம்:பதிக எண்:01: அசபை ............................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:03: அருச்சனை.......................பாடல்கள்: 012
நான்காம் தந்திரம்:பதிக எண்:05: சத்தி பேதம்......................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:06: வயிரவி மந்திரம்............பாடல்கள்: 050
நான்காம் தந்திரம்:பதிக எண்:07: பூரண சத்தி......................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:08: ஆதார ஆதேயம்.............பாடல்கள்: 100
நான்காம் தந்திரம்:பதிக எண்:06: வயிரவி மந்திரம்............பாடல்கள்: 050
நான்காம் தந்திரம்:பதிக எண்:07: பூரண சத்தி......................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:08: ஆதார ஆதேயம்.............பாடல்கள்: 100
நான்காம் தந்திரம்:பதிக எண்:09: ஏரொளிச் சக்கரம்..........பாடல்கள்: 036
நான்காம் தந்திரம்:பதிக எண்:10: வைரவச் சக்கரம்...........பாடல்கள்: 006
நான்காம் தந்திரம்:பதிக எண்:11: சாம்பவி மண்டலச் சக்கரம் .பாடல்கள்:009
======================================================(413+09=422)
நான்காம் தந்திரம்-பதிகம் எண்:11.
சாம்பவி மண்டலச் சக்கரம் (பாடல்கள்:9)
மேலும் பயணிப்போம் பத்தாம்
திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல்
அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய
நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.நான்காம் தந்திரம்:பதிக எண்:10: வைரவச் சக்கரம்...........பாடல்கள்: 006
நான்காம் தந்திரம்:பதிக எண்:11: சாம்பவி மண்டலச் சக்கரம் .பாடல்கள்:009
======================================================(413+09=422)
நான்காம் தந்திரம்-பதிகம் எண்:11.
சாம்பவி மண்டலச் சக்கரம் (பாடல்கள்:9)
பாடல் எண் : 1
சாம்பவி
மண்டலச் சக்கரம் சொல்லிடில்
ஆம்பதம் எட்டாக இட்டிடின் மேலதாக்
காண்பதம் தத்துவம் நால்உள் நயனமும்
நாம்பதம் கண்டபின் நாடறிந் தோமே.
ஆம்பதம் எட்டாக இட்டிடின் மேலதாக்
காண்பதம் தத்துவம் நால்உள் நயனமும்
நாம்பதம் கண்டபின் நாடறிந் தோமே.
பொழிப்புரை : `சாம்பவி மண்டலம்` என்னும் பெயரினதாகிய
சக்கரத்தின் அமைப்பினை யாம் சொல்லின், வரிசைக்கு எட்டு அறைகளாக எட்டு வரிசையில்
அறுபத்து நான்கு
அறைகளைக்
கீறி,
அவற்றின்
நடுவில் நான்கு அறைகளை,
`சிவம், சத்தி, நாதம், விந்து` என்னும் நான்கும் அருவத்
திருமேனிகளாகக் கருதி,
அவற்றையே
அச்சக்கரத்தின்
கண்களாக வைத்து,
அனைத்தையும்
முற்ற நோக்குதல் வேண்டும். அப்பொழுதே அச்சக்கர வழிபாட்டினை நாம்
அறிந்தவராவோம்.
==============================================
பாடல் எண் : 2
நாடறி
மண்டலம் நல்லஇக் குண்டத்துள்
கோடற வீதி கொணர்ந்துள் இரண்டழி
பாடறி பத்துடன் ஆறு நெடுவீதி
ஈடற நாலைந் திடவகை ஆமே.
கோடற வீதி கொணர்ந்துள் இரண்டழி
பாடறி பத்துடன் ஆறு நெடுவீதி
ஈடற நாலைந் திடவகை ஆமே.
பொழிப்புரை : நாடறிந்த
மண்டலமான
இந்த நல்ல சக்கரத்தில் வளைதல் இல்லாது நேராய்ச் செல்லும் வீதிகளை
நாற்புறத்தும்
அமைத்து,
அவற்றில்
ஒவ்வொரு வீதிக் குள்ளாலும் நடுவில் இரண்டிரண்டு அறைகளை இடைவெளியாக விடுக. `நெடிய வீதி` எனப்பட்டவைகளில் உள்ள
அறைகள்
பதினாறாகும். இங்ஙனம் ஆனபின் வீதிக்குள் அமைந்த அறைகளின் எண்ணிக்கையும், உட்சுற்றில் உள்ள
அறைகளின் எண்ணிக்கையும் தனித்தனி இருபதாம்.
==============================================
பாடல் எண் : 3
நாலைந்
திடவகை உள்ளதோர் மண்டலம்
நாலுநல் வீதியுள் நந்நால் இலிங்கமா
நாலுநற் கோணமும் நண்ணால் இலிங்கமா
நாலுநற் பூநடு நண்ணல்அவ் வாறே.
நாலுநல் வீதியுள் நந்நால் இலிங்கமா
நாலுநற் கோணமும் நண்ணால் இலிங்கமா
நாலுநற் பூநடு நண்ணல்அவ் வாறே.
பொழிப்புரை : இருபது
அறைகளை உடைய ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிவட்டமாய் நிற்கும். நல்ல வீதிகள் நான்கிலும்
திசைக்கு நான்காகப் பதினாறு இலிங்க உருவங்கள் இருக்க, நடுவில் உள்ள நான்கு அறைகளிலும் அவ்வாறே நான்கு இலிங்கங்கள் நடுவில் உள்ள ஓர் இலிங்கத்துடன்
நான்கு தாமரை மலர்களோடு நடுவொரு தாமரை மலரில் இருக்கும்.
==============================================
பாடல் எண் : 4
ஆறிரு
பத்துநால் அஞ்செழுத் தஞ்சையும்
வேறுரு வாக விளைந்து கிடந்தது
தேறிநீர் உம்மில் சிவாய நமஎன்று
கூறுமின் கூறிற் குறைகளும் இல்லையே.
வேறுரு வாக விளைந்து கிடந்தது
தேறிநீர் உம்மில் சிவாய நமஎன்று
கூறுமின் கூறிற் குறைகளும் இல்லையே.
பொழிப்புரை : எட்டு
எட்டு(8X8) அறுபத்து நான்கு அறைகள்
உள்ள இச்சக்கரத்தில் சுற்று வீதியில் உள்ளவை இருபத்தெட்டு, நடு வில் உள்ளவை நான்கு
ஆக முப்பத்திரண்டுடன் திசைக்கு இரண்டாக நான்கு திசைகளிலும்
இடைவெளியாக நிற்கும் அறைகள் எட்டுக் கூட அறைகள் நாற்பது. நடுவு நான்கு அறைகளின்
நடுவையும் ஓர் அறை யாகக் கொள்ள, கூடிய அறைகள் நாற்பத் தொன்று இவைகளில் உடலெழுத்துக்களில்
ஐவருக்கத்து இருபத்தைந்தையும் இருபத்தைந்து இலிங்கங்கட்கும் உரிய எழுத்துக்களாக நடுவண்
ஐந்தில் தென்கிழக்கு முதலாகத் தொடங்கிப் பின் மேற்கு முதலாக வலஞ்சென்று
இலிங்கங்கட்கு அணியவான கீழ் அறைகளில் அடைத்தல் வேண்டும்.
பின்னர்
யகரமாதி நான்கு,
‹ கரமாதி
நான்கு ஆக
எட்டினையும்
சுற்று வீதியில்,
இடைவெளியாக
உள்ள எட்டு அறைகளில் மேற்கு முதல் வலமாக அடைத்து, உட்சென்று வெற்றிடமாய்
உள்ள எட்டு அறைகளில் முறையே, `ள, க்ஷ, ஓம், சி, வா, ய, ந, ம` என்னும் எட்டு எழுத்துக்களையும் அடைத்து
நிரப்பிச்
செபித்தல் வேண்டும். செபிக்கின் குறையின்றி வாழலாம்.
==============================================
பாடல் எண் : 5
குறைவதும்
இல்லை குரைகழல் கூடும்
அறைவதும் ஆரணம் அவ்வெழுத் தாகில்
திறம்அது வாகத் தெளியவல் லாருக்
கிறவில்லை என்றென் றியம்பினர் காண.
அறைவதும் ஆரணம் அவ்வெழுத் தாகில்
திறம்அது வாகத் தெளியவல் லாருக்
கிறவில்லை என்றென் றியம்பினர் காண.
பொழிப்புரை : வேதத்தால்
மூலமந்திரமாகச் சொல்லப்படுவதும் திருவைந்தெழுத்தே ஆதலின், அதனை
அவ்வாறே
தெளிய வல்லவர்கட்கு உலகப் பயன்களிலும் யாதும் குறைதல் இல்லை. வழிநிலைக் காலத்தில் `இறப்பு` என்பது இல்லாமல், சிவபெருமானது ஒலிக்கும்
வீரக்கழலையணிந்த திருவடியும் கிடைக்கும் என்று, அறிந்தோர் பன்முறையும்
வலியுறுத்திக்
கூறியுள்ளார்கள்.
==============================================
பாடல் எண் : 6
காணும்
பொருளும் கருதிய தெய்வமும்
பேணும் பதியும் பெருகிய தீர்த்தமும்
ஊணும் உணர்வும் உறக்கமும் தானாகக்
காணுங் கனகமும் காரிகை யாமே.
பேணும் பதியும் பெருகிய தீர்த்தமும்
ஊணும் உணர்வும் உறக்கமும் தானாகக்
காணுங் கனகமும் காரிகை யாமே.
பொழிப்புரை : ஐம்புல
நுகர்ச்சியவாக
உலகில் காணப்படுகின்ற பல பொருள்களும், நினைக்கின்ற பல தெய்வங்களை வழிபடுதல், போற்றப்படுகின்ற திவ்யதலங்களில் வாழ்தல்,
பெருகி
ஓடுகின்ற
நதி முதலிய புண்ணிய தீர்த்தங்களில் மூழ்குதல் ஆகியவற்றால் வரும்
பயன்களும்
நுகர்ச்சியும் நல்ல அறிவும், கவலையற்ற உறக்கமும், எல்லாம்
தானேயாய்
நிற்கும் பொன்னும் ஆகிய எல்லாம் இச்சாம்பவி மண்டலச் சக்கர வழிபாட்டினால்
கிடைக்கும்.
==============================================
பாடல் எண் : 7
ஆமே
எழுத்தஞ்சும் ஆம்வழி யேஆகப்
போமே அதுதானும்? போம்வழி யேபோனால்
நாமே நினைத்தன செய்யலும் ஆகும்
பார்மேல் ஒருவர் பகையில்லை தானே.
போமே அதுதானும்? போம்வழி யேபோனால்
நாமே நினைத்தன செய்யலும் ஆகும்
பார்மேல் ஒருவர் பகையில்லை தானே.
பொழிப்புரை : திருவைந்தெழுத்து
எஞ்ஞான்றும்
நன்மைக்கு ஏதுவாம் வழி உண்டாகவே செய்யும். அதனையே தெளிந்து வல்லாராதல்
யாருக்குக்கூடும்! கூடுமாயின், நினைத்த வற்றை முடித்தல் கூடும்.
உலகில்
நமக்குப் பகைவரும் இலாரவர்.
==============================================
பாடல் எண் : 8
பகையில்லை
என்றும் பணிந்தவர் தம்பால்
நகையில்லை நாணாளும் நன்மைகள் ஆகும்
வினையில்லை என்றும் விருத்தமும் இல்லை
தகையில்லை தானும் சலமது வாமே.
நகையில்லை நாணாளும் நன்மைகள் ஆகும்
வினையில்லை என்றும் விருத்தமும் இல்லை
தகையில்லை தானும் சலமது வாமே.
பொழிப்புரை : திருவைந்தெழுத்தை
ஓதுபவரிடத்தில்
பகை,
பெரியோர்
இகழும் இகழ்ச்சி,
இருவினை, பொருந்தாச்
செயல்கள், இடையூறு என்பவை இல்லையாம்.
நாள்தோறும் நன்மைகளே விளையும். அம்மந்திரமே மலத்தை முற்றக் கழுவித்
தூய்மையைத் தரும் நீராம்.
==============================================
பாடல் எண் : 9
ஆரும்
உரைசெய்ய லாம்அஞ் செழுத்தாலே
ஆரும் அறியாத ஆனந்த ரூபம்ஆம்
பாரும் விசும்பும் பகலும் மதியதில்
ஊரும் உயிரும் உணர்வது மாமே.
ஆரும் அறியாத ஆனந்த ரூபம்ஆம்
பாரும் விசும்பும் பகலும் மதியதில்
ஊரும் உயிரும் உணர்வது மாமே.
பொழிப்புரை : மண்ணும், விண்ணுமாகிய எல்லா
இடத்திலும்,
பகலும், இரவுமாகிய எல்லாக்
காலத்திலும்
வாழ்தலை யுடைய எல்லா உயிரும், அவற்றின் உணர்வுமாய் இருப்பது
திருவைந்தெழுத்து.
அதனால்,
எதனை
வேண்டுவோரும் அந்த மந்திரத்தை ஓதலாம். ஓதுவதால் உலகில் பிறர் அறிந்திலாத விடய
இன்பமும்,
இறை
இன்பமும் மிகவும்
உளவாம்.
==============================================
No comments:
Post a Comment
தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!